அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பதவியேற்கவுள்ளார்.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்ற இத்தேர்தலில் சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவரும் நேரடியாக போட்டியிட்டிருந்தனர்.
தேர்தலின் வாக்குப்பதிவுகள் 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அக்டோபர் 19ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இவ்வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகினார். ராகுல் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாருமே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இன்று டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், எம்பிக்கள், காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.