fbpx

மக்களே…! தமிகழம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று ஒரு மட்டும்…!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

எனவே, ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

English Summary

Today only one of the registrar’s offices across Tamil

Vignesh

Next Post

Tn Govt: 2011-க்கு முன் அனுமதி இல்லாமல் கட்டிய கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு...!

Fri Jul 12 , 2024
IMPORTANT NOTICE TO EDUCATIONAL INSTITUTIONS BUILT WITHOUT PERMISSION BEFORE 2011

You May Like