fbpx

இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும்.. இந்த மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க..

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர்‌, அரியலூர்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 30, 1, 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவை காற்று வீசக்கூடும்.. எனவே நாளை முதல் வரும் 2-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

பர்தா அணிய மறுத்த மனைவி கத்தியால் குத்தி கொலை… மும்பையில் பயங்கரம் ..

Wed Sep 28 , 2022
மும்பையில் பர்தா அணிய மறுத்த மனைவியை கணவனே கத்தியால் குத்திக் கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மும்பையில் டாக்சி ஓட்டுனர் இக்பால் (36). இவர் ரூபாலி (20) என்ற இந்து பெண்ணை 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது பெயரை சாரா என மாற்றியுள்ளார்.கடந்த 202ம் ஆண்டு இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்தது. இருவேறு மதத்தவர் திருமணம் செய்தது குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]

You May Like