fbpx

இன்றைய தொழிலாளி! நாளைய முதலாளி!… இன்று சர்வதேச முதலாளிகள் தினம்!

மனிதர்களுக்கு தொழில்தான் மூலதனமாக உள்ளது. வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்லவும், இந்த சமூகத்தில் மதிப்பு மிகுந்த வாழ்க்கையை வாழவும், நம்முடைய மற்றும் நம்மை சார்ந்தோரின் தேவைகளை நிறைவேற்றி கொள்ளவும் வேலைகள் பெரிதும் உதவுகின்றன. வேலைகளின்றி வாழ்கை இல்லை என்பதே பலரின் நிலையாக இருக்க, அக்டோபர் 16ஆம் தேதியான இன்று முதலாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. 

ஊழியர்களின் உழைப்பு மற்றும் சிறப்புகளை போற்றும் வகையில் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுவதை போலவே, ஊழியர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்ட முதலாளிகளை பெருமைப்படுத்தும் வகையில், முதலாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் முதலாளிகள் -ஊழியர்கள் இடையிலான உறவை மேம்படுத்த உதவுகிறது.

முதலாளிகள் தினம் முதன் முதலில் அமெரிக்காவில் தோன்றியது. அந்நாட்டின் இல்லினாய்ஸ் (Illinois) பகுதியில் உள்ள ஸ்டேட் ஃபார்ம் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தில் செக்ரெட்ரியாக பணியாற்றிய ஹரோஸ்கி (Haroski) என்பவர் தானும் அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றிய சக ஊழியர்களும், துணை அதிகாரிகளும் தங்களை கனிவுடன் கவனித்து வந்த நிறுவன முதலாளியை பாராட்டி கவுரவிக்க வேண்டும் என்று விரும்பினார். இதில் சிப்பாரு என்னவென்றால் இவருக்கு முதலை வேறு யாருமல்ல இவரது தந்தை தான். ஊழியர்களோடு ஊழியர்களாக பணியாற்றிய ஹரோஸ்கி, தன்னை பார்ப்பது போன்றே பிற ஊழியர்களையும் பார்த்து கொள்ளும் தந்தையின் குணத்தை கண்டு வியந்தார்.

அனைத்து முதலாளிகளும் தங்கள் ஊழியர்களுக்கு நல்ல தலைமை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க தன் தந்தை சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார், எனவே பாராட்டுக்கு தகுதியானவர் என்று ஹரோஸ்கி உணர்ந்தார். இதனை தொடர்ந்து அமெரிக்க வர்த்தக சபையில் 1958-ஆம் ஆண்டு தேசிய முதலாளி தினத்தை பதிவு செய்தார் மற்றும் இந்நாளை கொண்டாட தனது தந்தையின் பிறந்த நாளான அக்டோபர் 16-ஐ தேர்ந்தெடுத்தார். இதனை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு 1962-ல் இல்லினாய்ஸ் கவர்னர் ஓட்டோ கெர்னர் என்பவர் ஹரோஸ்கியின் முதலாளி தினத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார்.

Kokila

Next Post

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை..!! வெளியானது புதிய அறிவிப்பு..!! தேதி மேலும் நீட்டிப்பு..!!

Mon Oct 16 , 2023
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, செப்டம்பர் 30ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளங்கலை போஸ்ட் பேசிக், பிஎஸ்சி நர்சிங் படிப்பு மற்றும் துணை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வரை பதிவு மற்றும் இடங்களை தேர்வு செய்யலாம் என்று அறிவிப்பு […]

You May Like