தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயருகிறது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின்கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகள் உட்பட தமிழகம் முழுவதும் 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது. ஒவ்வொரு வகையான வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதன்படி சென்னையில் உள்ள வானகரம், சூரப்பட்டு, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம்-திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்பட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயருகிறது. இதனால் விலைவாசி உயர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், நாக்பூர் இடையே ரூ.55 ஆயிரம் கோடி செலவில் 701 கி.மீ. தூரத்துக்கு சம்ருத்தி விரைவு சாலை போடும் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தற்போது நாக்பூர் முதல் இகத்பூரி வரை பணிகள் முடிந்து சாலை திறக்கப்பட்டுள்ளது. இகத்பூரில் இருந்து அம்னே (தானே) வரை சாலைத்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த 6 வழிச்சாலை மூலம் மும்பை – நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது. சாலைப்பணி முழுமையாக முடிந்த பிறகு பயண நேரம் மேலும் குறையும். இந்தநிலையில் வருகிற 1-ந் தேதி முதல் சம்ருத்தி சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி மக்களவை உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி,‘‘நாடு முழுவதும் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் வகையில் சுங்கச்சாவடிகள் சீரமைக்கப்படும். கூடுதல் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 3 மாதங்களில் செய்யப்படும்’’ என்று அறிவித்திருந்தார்.
ஆனால், அதன்பின் மூன்றாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகளைக் கூட மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் புதிய சுங்கக்கட்டணக் கொள்கை அறிவிக்கப்படும் என்றும், அதில் சாலைகளை பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: சோகம்…! பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்…!