fbpx

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. வரும் 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

வரும் 1-ம் தேதி முதல் சமயபுரம், துவாக்குடி ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டிக்களிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.. அதன்படி தமிழகத்தில் உளுந்தூர்ப்பேட்டை, திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர உள்ளதாக தகவல் வெளியானது…

இந்நிலையில் சமயபுரம், துவாக்குடி ஆகிய சுங்கச்சாவடிகளிலும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.. அந்த வகையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் காருக்கான சுங்கக்கட்டணம் ரூ.45ல் இருந்து ரூ.55 ஆக வசூலிக்கப்பட உள்ளது. இதேபோல் பேருந்துக்கான கட்டணம் ரூ.165-ல் ரூ.185 ஆகவும், லாரிக்கான கட்டணம் ரூ.265-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மாதாந்திர கட்டணமாக காருக்கு ரூ.1,400-ல் இருந்து ரூ.1,605 ஆகவும், பேருந்துக்கு க்கு ரூ.4,905-ல் இருந்து ரூ.5,620 ஆகவும், லாரிக்கு ரூ.7,880-ல் இருந்து ரூ.9,035 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது…

துவாக்குடி சுங்கச்சாவடி வழியாக ஒருமுறை மட்டுமே பயணிக்கும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.65-ல் இருந்து ரூ.75-ஆகவும், ஒரு நாளில் பலமுறை பயணிக்கும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.100-ல் இருந்து ரூ.110ஆகவும், மாதக்கட்டணமானது ரூ. 1955-ல் இருந்து ரூ.2,210-ஆகவும் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் ஒருமுறை பயணிக்கும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு ரூ.230-ல் இருந்து ரூ.260 ஆகவும், பலமுறை பயணிக்கும் கட்டணம் ரூ. 344-லிருந்து 385 ரூபாய் ஆக உயர்த்தப்பட உள்ளது.. மாதக்கட்டணம் ரூ.6845-ல் இருந்து ரூ.7,735-ஆக உயர்த்தப்பட உள்ளது..

Maha

Next Post

மணமகளின் தலையிலும், மார்பிலும் எச்சில் துப்பி வழியனுப்பும் தந்தை.. நூதன மரபை பின்பற்ற என்ன காரணம்..?

Fri Aug 26 , 2022
உலகில் பல வகையான வித்தியாசமான பழக்கவழக்கங்களும், பழைய மரபுகள் இன்று வரை மக்களால் பின்பற்றப்படுகின்றன. அத்தகைய பாரம்பரியத்தைப் பற்றிய தகவல்களை இன்று பார்க்கலாம்.. மணமகள் மீது எச்சில் துப்பியபடி அவரை வழியனுப்புகின்றனர்.. கென்யா மற்றும் தான்சானியாவில் வசிக்கும் மசாய் பழங்குடியின மக்கள் இந்த வித்தியாசமான மரபை பின்பற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணம் முடிந்து விடைபெறும் நேரத்தில், மணமகளின் தலையிலும் மார்பகத்திலும் அவரின் தந்தை எச்சில் துப்புவாராம்.. இது தந்தையிடமிருந்து மகளுக்கு […]

You May Like