fbpx

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு…! கிலோ ரூ.140-க்கு விற்பனை…!

சென்னை கோயம்பேடு தக்காளி விலை 10 ரூபாய் அதிகரித்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை கடந்த சில தினங்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், சில்லரைக்கு ஒரு கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னையில் 82 ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்ணை பசுமை கடைகள், ரேஷ்ன் கடைகள என மொத்தம் 111 கடைகளில் தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகளிலும், பசுமை பண்ணையில் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரவரிசை குறியீட்டு எண் வெளியீடு...!

Mon Jul 10 , 2023
கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரவரிசை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டது. இது விரிவான பகுப்பாய்வுக்கான குறியீட்டின் மூலம் மாவட்ட அளவில் பள்ளிக் கல்வியின் செயல்திறனை மதிப்பிடுகிறது. சுமார் 14.9 லட்சம் பள்ளிகள், 95 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணிகளைச் சேர்ந்த சுமார் 26.5 கோடி மாணவர்கள் என பலதரப்பட்ட சூழலைக் கொண்ட […]

You May Like