fbpx

மீண்டும் உயருகிறது தக்காளி விலை..! இன்று எவ்வளவு தெரியுமா..? இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

சென்னையில் தக்காளி விலை கிடுகிடு வென உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சென்னை கோயம்பேட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கிறது. இதனால், அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது, அதன் எதிரொலி காய்கறி வரத்திலும் பாதிப்பது இயல்பு. அந்தவகையில், தற்போது தக்காளி விலையில் இந்த பாதிப்பு எதிரொலித்து இருக்கிறது. இதனால் தக்காளியின் விலை ‘கிடுகிடு’ வென உயர்ந்து ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் உயருகிறது தக்காளி விலை..! இன்று எவ்வளவு தெரியுமா..? இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் கூறுகையில், ”பொதுவாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 65 லாரிகள் வரை தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 40 முதல் 45 லாரிகள் வரை மட்டுமே சரக்குகள் வருகின்றன. இதனால், ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.60 வரை விற்பனையாகிறது. இப்போதுள்ள சூழலில் தக்காளியை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி கோயம்பேட்டுக்கு விற்பனைக்கு எடுத்து வருகிறோம். அண்டை மாநிலங்களில் மழை நீடிக்கும் பட்சத்தில் தக்காளி விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளது”. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Chella

Next Post

“ ரூ.1000 என்பது இலவசம் அல்ல.. தந்தையின் பேரன்புடன் மாணவிகளுக்கு என்றும் துணை நிற்பேன்..” ஸ்டாலின் உருக்கம்..

Mon Sep 5 , 2022
மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் ( பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. சென்னை ராயபுரம், பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார்.. இத்திட்டத்தில் முதற்கட்டமாக சுமார் 1 […]
தலைவர் பதவிக்கு அக்.7இல் முக.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்..!! அக்.9இல் திமுக பொதுக்குழு கூட்டம்..!!

You May Like