இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் தற்காலியின் நிலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக, தக்காளிக்கு மவுசு வெகுவாக அதிகரித்துள்ளது.
மேலும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புகளுக்கு ஆட்களை நிறுத்தி தக்காளி விற்பனை செய்யும் நிகழ்வும் நடந்தேறி வருகிறது. தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா என்ற மாநிலங்களில் தற்காலியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் கர்நாடக மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளியை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி தெலுங்கானா மாநிலம் அதிபிலாபாத் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இதில் லாரியில் வைக்கப்பட்டிருந்த தக்காளி சாலையில் சிதறியது.
தக்காளியின் விலை தற்போது அதிகமாக இருக்கின்ற காரணத்தால், அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் விபத்தில் சிக்கிய லாரியில் இருக்கும் தக்காளியை அள்ளி செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் விபத்து தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் தற்காலிக துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரை பாதுகாப்பிற்காக நிறுத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவத்தை அந்த பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.