fbpx

சென்னையில் நாளையும் (டிச.8) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. சென்னையே மழை வெள்ளத்தில் மிதக்கிறது. அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பலர் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன.

புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 தாலுக்காவில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு..!! புதிய அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்..!!

Thu Dec 7 , 2023
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செமஸ்டருக்கான புதிய அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை வரலாற்றில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 4ஆம் தேதி நடைபெறவிருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. எனவே மறுதேதி விரையில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, […]

You May Like