fbpx

கவனம்…! நாளை தான் கடைசி நாள்…! ஆசிரியர்கள் உடனே இதை செய்து முடிக்க வேண்டும்…!

தமிழக பள்ளிக் கல்வியில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதற்குமுன் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12 முதல் 24-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 12-ம் வகுப்புக்கு பிப்ரவரி 12 முதல் 17-ம் தேதி வரையும், 11-ம் வகுப்புக்கு பிப்ரவரி 19 முதல் 24-ம் தேதி வரையும் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவுசெய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நாளை மாலை வரை தேர்வுத் துறை வலைதளத்தில் (http://www.dge.tn.gov.in/) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் அதில், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மாணவர்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வின் போது மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். செய்முறை தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களை தான் நியமிக்க வேண்டும்.

Vignesh

Next Post

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!… எந்தவித கல்வித் தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம்!

Fri Feb 16 , 2024
தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறவுள்ளது. தமிழக அரசு மாவட்டம் தோறும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் அதிக அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி வருகிறது. அரசு துறைகளை தவிர்த்து தனியார் துறைகளில் உள்ள வேலை நாடுனர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கு இடையில் அருமையான வாய்ப்புகளை உருவாக்கி குறிக்கிறது. அந்த வகையில் இன்று […]

You May Like