தற்போது அசைவ உணவை விரும்புபவர்களிடையே மாமிச உணவு முறை என்ற ஒரு நவநாகரிக உணவுமுறை பிரபலமாக உள்ளது. அதாவது இந்த உணவின் சிறப்பு என்னவென்றால், இது விலங்கு புரதங்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த உணவுமுறையில் காய்கறிகள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.. உடற்பயிற்சி ஆர்வலர்கள் இந்த உணவைப் பற்றி ஆர்வமாக உள்ளனர். மேலும் இதை அதிக புரத உணவு மற்றும் காய்கறிகள் இல்லாத வாழ்க்கை முறை என்று அழைக்கின்றனர். ஆனால், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு உண்மையில் நல்லதா? தெரிந்து கொள்வோம்.
மாமிச உணவு ஆரோக்கியமானதா?
அசைவ உணவை மட்டுமே இந்த உணவு முறை, உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவியது மற்றும் முன்பை விட ஆரோக்கியமாக மாற்றியது என்று கூறுகின்றனர்.. இருப்பினும், சுகாதார நிபுணர்கள் இந்த உணவு முறையை ஆதரிக்கவில்லை. தேசிய சுகாதார மையத்தின் பொது பயிற்சியாளரான டாக்டர் ரூபி ஆஜ்லா இதுகுறித்து பேசிய போது கடுமையான விலங்கு புரத உணவு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்தார். குறைந்த கார்ப் மெனுவுடன் கூடிய கீட்டோ உணவுடன் கூடிய மாமிச உணவும் இயற்கையில் அழற்சிக்கு எதிரானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
கடந்த கால ஆராய்ச்சிகளைச் சுட்டிக்காட்டி, இதயம் மற்றும் சிறுநீரகங்கள் உட்பட உடலின் முக்கிய உறுப்புகளில் முதிர்ச்சியடைந்த செல்கள் குவிந்து, முறையான வீக்கம் மற்றும் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று ரூபி அவுஜ்லா தெரிவித்துள்ளார்.. முதிர்ச்சியடைந்த செல்கள் உடலில் அதிகமாக இருக்கக்கூடாது என்றும், அவை இயற்கையாகவே நோயெதிர்ப்பு மண்டலத்தால் அழிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
போதுமான ஊட்டச்சத்து குறித்த கவலைகள்
மாமிச உணவில் போதுமான ஊட்டச்சத்து இல்லாததற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பல மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். . அதிக இறைச்சி மற்றும் காய்கறிகள் இல்லாத உணவு மக்கள் நினைப்பது போல் பயனுள்ளதாக இருக்காது. இந்த உணவு முறை கொழுப்பு அதிகரிப்பதற்கும் இதய பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மாமிச உணவு குறுகிய காலத்தில் முடிவுகளைக் காட்டலாம்
குறுகிய காலத்திற்கு அசைவ உணவைப் பின்பற்றுவது நேர்மறையான முடிவுகளைக் காட்டலாம். இருப்பினும், நீண்ட காலத்திற்கு இந்த உணவு முறையை பின்பற்றுவது இதய நோய்களுக்கு வழிவகுக்கும், டிமென்ஷியா அபாயத்தையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக இந்த உணவைப் பின்பற்றுபவர்களைப் பற்றி சரியான ஆய்வுகள் இல்லை. எனவே இந்த உணவு பழக்கத்தை ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Read More : ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தும் சர்க்கரை.. வயதுக்கு ஏற்ப தினமும் எவ்வளவு சர்க்கரை சாப்பிட வேண்டும்..?