SRH vs Lucknow: ஐபிஎல் 18 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்றைய 6வது லீக் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்து. ராஜஸ்தான் அணியில் துருவ் ஜோரேல் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தனர். அதேபோல், சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் அணியின் வைபவ், ஹர்ஷித் ரானா, மோயின் அலி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 152 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 17.3 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்சை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய குவிண்டன் 97 ரன்களுடனும், அங்க்ரிஷ் 22 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் கொல்கத்தா 6வது இடத்தில் உள்ளது.
முன்னதாக ராஜஸ்தான் அணி, ஐதராபாத் அணியுடன் தோல்வியை தழுவிய நிலையில் இது அந்த அணிக்கு இரண்டாவது தொடர் தோல்வியாகும். கடந்த 23ம் தேதி இங்கு நடந்த முதல் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி 44 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. நடப்புத் தொடரில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில், சன்ரைசர்ஸ் அணி, ராஜஸ்தான் அணிக்கு எதிராக குவித்த 286/6 ரன்னே அதிகபட்ச ஸ்கோர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி குவித்த 2வது அதிகபட்ச ரன் இது.
இந்தநிலையில், 7வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிகள் இன்று மோதுகின்றன. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், தொடரின் முதல் சதம் விளாசிய இஷான் கிஷண், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாஸன், கேப்டன் பேட் கம்மின்ஸ் என கடைசி வரை பேட்டிங்கில் கலக்கும் அதிரடி வீரர்கள் சன்ரைசர்ஸ் அணியில் உள்ளனர். பந்து வீச்சிலும் முகமது ஷமி, சிம்ரஜித் சிங், ஆடம் ஜம்பா, ஹர்ஷல் படேல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள புதிய கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ அணி ஐதராபாத்துக்கு வந்துள்ளது. முதல் ஆட்டத்தில் டெல்லி அணியிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது லக்னோ.அதனால் வெற்றிக் கணக்கை தொடங்க அணியில் உள்ள அய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், டேவிட் மில்லர் ஆகியோர் அதிரடியை தொடர வேண்டும். முதல் ஆட்டத்தில் தலா 2விக்கெட் கைப்பற்றியதுடன், சிக்கனமாகவும் பந்து வீசிய தமிழ்நாடு வீரர் மணிமாறன் சித்தார்த், திக்வேஷ் ரதி, ஷர்துல் தாகூர் ஆகியோர் இன்றும் சன்ரைசர்ஸ் அணிக்கு சவாலாக இருப்பர்.
Readmore: ஷாக்!. கோகோ கோலாவில் பிளாஸ்டிக் துகள் கலப்பு!. 10,000 குளிர்பான டின்களை திரும்பப்பெற்ற நிறுவனம்!