சேலம் மாவட்டத்தைச் சார்ந்த நில அளவர் மற்றும் வரைவாளர் ஆகிய பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 16.09.2022 அன்று சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக துவங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நில அளவர் , வரைவாளர் மற்றும் உதவி வரைவாளர் ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 1,089 பணிக் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு 06.11.2022 அன்று நடைபெற உள்ளது.இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக 16.09.2022 அன்று காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த பயிற்றுநர்கள் மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டும் நடத்தப்பட உள்ளன. மேலும் பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் தொடர்ச்சியாக மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 94990 55941 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேவேலை நாட்களில் காலை 10-00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.