fbpx

வேற வேற பெயர்களில் களமிறங்கும் டொயோட்டா..!

மலேசிய சந்தைக்கான டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் கார், இந்தோனேஷியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்பின் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிப்புற டிசைனை (Design) பொறுத்தவரையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை போலவேதான், டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரும் உள்ளது. இதன்படி டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரில், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் 18 இன்ச் அலாய் வீல்கள், ட்யூயல் டோன் ஓஆர்விஎம்கள், கருப்பு நிற ‘B’ மற்றும் ‘C’ பில்லர்கள் ஆகியவையும், டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை 2.0 V மற்றும் 2.0 HEV ஆகும். அதே நேரத்தில் இந்த கார் அங்கு மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அத்துடன் டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்றவை குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். இதுதவிர அடாஸ், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

அவை 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையில், மலேசியாவில் டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மாருதி சுஸுகி இன்விக்டோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. வரும் ஜூலை 5ம் தேதி மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் விலைகள் எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Maha

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை….! காவிரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முக்கிய தகவல்….!

Sat Jun 24 , 2023
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவிரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு சுமார் 3 மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. கடந்த 19ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காலை 4 மணி அளவில் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை சாற்றேற குறைய 5 மணி நேரம் நடைபெற்றது அதன் பிறகு அவர் […]

You May Like