fbpx

‘பாரம்பரிய மயில் கறி செய்முறை’!. வைரலான வீடியோ!. யூடியூப்பரை கைது செய்து போலீஸ் அதிரடி!.

Peacock Curry: தெலுங்கானாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், “பாரம்பரிய மயில் கறி”க்கான செய்முறை குறித்த பகிர்ந்த வீடியோ வைரலானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தேசிய பறவையாக மயில் விளங்கிவருகிறது. இந்தநிலையில், தெலுங்கானா மாநிலம், சிரிசில்லா மாவட்டம் தங்கல்லப்பள்ளியைச் சேர்ந்த கோடம் பிரனய்குமார் என்பவர், பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மயில் கறியை எப்படி சமைக்க வேண்டும் என்பதை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ பல விமர்சனங்களைப் பெற்றதோடு, இந்த வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தூண்டியது.

இதையடுத்து, வீடியோ அகற்றப்பட்டாலும், விலங்கு ஆர்வலர்கள் குமார் மீது கடுமையான நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளனர், குறிப்பாக அவர் காட்டுப்பன்றி கறி சமைப்பது குறித்த வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். இந்தநிலையில், நாட்டின் தேசிய பறவையை சட்டவிரோதமாக கொல்லும் வீடியோக்களை பகிர்ந்ததற்காக கோடம் பிரனய் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களைச் செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ராஜண்ணா சிரிசில்லா மாவட்ட எஸ்பி அகில் மகாஜன் தனது X-இல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Readmore: இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த வலியுறுத்தி நாளை விசிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

English Summary

YouTuber’s ‘Peacock Curry Recipe’ Lands Him In Soup, Arrested After Controversial Video Draws Ire

Kokila

Next Post

கட்டாயம் பின்பற்ற வேண்டும்... பேருந்து நடத்துனர்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு..!

Mon Aug 12 , 2024
Conductors should assist in locking with a handle installed on the bus.

You May Like