திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்கின்றன.
சரஸ்வதி பூஜை – ஆயுதபூஜை என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்றுடன் விடுமுறை முடிவதால் மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்புகின்றார்கள். சென்னை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் பரனூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கார்கள் ,தனியார் பேருந்து , அரசுப் பேருந்து என வாகனங்களில் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விழாக்காலங்களில் விடுமுறை முடிந்ததும் ஒரே நேரத்தில் மக்கள் பயணிப்பதால் , வாகன நெரிசல் ஏற்படுகின்றது. கூடுதலாக பூத்கள் அமைக்கப்பட்ட நிலையிலும் இந்த வாகன நெரிசல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவாக வாகனங்கள் பயணிக்க வேண்டும் என்பதற்காக ’பாஸ்ட் டேக் ’ முறை கொண்டு வரப்பட்டது. இதனால் டோல்கேட்டை கடக்கும் போது தானாக கட்டணம் செலுத்தப்படும். வாகனங்கள் நெரிசல் குறையும் இது எந்த காலக்கட்டத்திலும் உபயோகமாக இருக்க வேண்டும்.
ஆனால் , சென்னை நோக்கி வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்குகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் இந்த சூழ்நிலை நிலவுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.