Gujarat: குஜராத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது காருக்குள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் ரந்தியா கிராமத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகள், தங்களது 7 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். வழக்கம் போல், நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் பண்ணைக்கு வேலைக்கு சென்ற பெற்றோர், தங்களது 7 குழந்தைகளை அங்கே விளையாடுமாறு விட்டுவிட்டு சென்றுள்ளனர். 7 குழந்தைகளில் 4 பேர் பண்ணை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளரின் காரில் நுழைந்துள்ளனர். எதிர்பாராத விதமாக காரின் கதவு மூடப்பட்டது. இதில் காரில் சிக்கிக்கொண்ட 4 குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காரிலேயே உயிரிழந்தனர்.
இதில் உயிரிழந்த குழந்தைகள் 2 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கார் உரிமையாளர் மாலை வேலை முடிந்து திரும்பி வந்தபோது, அவர்கள் சடலங்களை காரில் கண்டனர்” என்றார். இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அம்ரேலி காவல் நிலையத்தில் தற்செயலான மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Readmore:“தமிழகத்தில் உள்ள தெலுங்கு மக்கள் விபச்சாரிகளிடமிருந்து வந்தவர்கள்”!. நடிகை கஸ்தூரி சர்ச்சை!.