கேரள மாநில பகுதியில் உள்ள கொல்லம் அருகே பரவூரில் வினுகிருஷ்ணன் என்பவர் துபாயில் பணிபுரிந்து வருகின்ற நிலையில்
பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சாந்த்ரா என்ற பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில் நேற்று இருவரும் அருகில் உள்ள ஒரு பாறை குளத்திற்கு சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்கே போட்டோ எடுப்பதற்காக 150 அடி உயரத்தில் உள்ள பாறையின் மீது ஏறி எடுக்க முயற்சி செய்துள்ளனர். இந்த நிலையில் சாந்த்ரா கால் தடுமாறி எதிர்பாராத விதமாக அங்கிருந்து விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வினு கிருஷ்ணன் சாந்தராவை காப்பாற்ற தண்ணீரில் திடீரென குதித்து வினு கிருஷ்ணன் சாந்தராவை காப்பாற்றி இருவரும் கத்தி சத்தமிட்டுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொது மக்கள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு படைக்கும் தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையில் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுமன தம்பதிகள் விபத்துக்குள்ளானது சம்பவம் குடும்ப உறுப்பினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.