fbpx

தூக்கத்தில் நடந்த துயரம்..!! உயிரை காவு வாங்கிய பிரிட்ஜ்..!! மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி..!!

தூக்கத்தில் குளிர் சாதன பெட்டியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை கேகே நகர் கிழக்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (43). இவர், நேற்றிரவு மதுகுடித்துவிட்டு தனது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் அருகே தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, தனது இடது கை தோள்பட்டை குளிர்சாதன பெட்டியின் மீது உரசியதால், அதில் மின்கசிவு ஏற்பட்டு துடிதுடித்துள்ளார்.

அவரது மனைவி கிரிஜா, கணவரை காப்பாற்ற முயற்சிக்கும்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. ஆனால், அவர் உடனே சுதாரித்துக் கொண்டு தனது கணவரை மீட்டுள்ளார். இதையடுத்து, சுயநினைவின்றி இருந்த கணவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்து கேகே நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வெங்கடேசனின் மனைசி கிரிஜா கூறுகையில், “எப்போதும் படுக்கும் இடத்தில் தான், எனது கணவர் படுத்திருந்தார். நேற்று குடிபோதையில் தூங்கியபோது குளிர்சாதன பெட்டியில் தோள்பட்டை பட்டுள்ளது. அதனால் சத்தமாக அவர் முனகினார். என்ன நடந்தது என நான் அவரை எழுப்ப முற்பட்டபோது என் மீதும் மின்சாரம் பாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சத்தமிட்டுக் கொண்டே அக்கம் பக்கத்தினரை அழைத்து மின்சாரத்தை ஆஃப் செய்துவிட்டு அவரை மீட்டு, மருத்துவமனை அழைத்துச் சென்றதாகவும், ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் கிரிஜா கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : அமைச்சரவையில் அதிரடி மாற்றம்..!! துணை முதல்வராகிறார் உதயநிதி..? இன்று வெளியாகுமா அறிவிப்பு..?

English Summary

A tragic incident has taken place in Chennai where a person died due to electrocution after touching a refrigerator box while sleeping.

Chella

Next Post

உயிரோடு எரிக்கப்பட்ட 1.60 லட்சம் பேர்..!! மனித எச்சங்களால் நிரம்பி வழியும் மர்ம தீவு..!! எங்க இருக்கு தெரியுமா?

Tue Aug 13 , 2024
In this collection, we will learn about the island of Poveglia in Italy, which is full of various mysteries.

You May Like