ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒருநாள் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மின்கம்பங்களில் தற்போது தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில், நாகை மாவட்டத்தில் வசிக்கும் மின் வாரிய ஊழியரான சிவசங்கரன் என்பவர், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்புகளை கொடுப்பதற்கான பணிகளை செய்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது மின்னல் தாக்கியதில் மின்சாரம் பாய்ந்து டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டனர்.
இது குறித்து காவல்துறையிக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல் துறையினர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எதிர்பாரத விதமாக மின்வாரிய ஊழியர் டிரான்ஸ்பார்மரில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பற்றி எரியும் காட்சிகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.