fbpx

TRAI போட்ட அதிரடி உத்தரவு…! இனி பயனர்களுக்கு எளிதில் பதில் அளிக்க வேண்டும்…!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறையில் எளிதாக வணிகம் செய்வது குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ட்ராய் வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி “தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறையில் எளிதாக வணிகம் செய்வது என்ற தலைப்பிலான ஆலோசனைகளை வெளியிட்டது. இந்த ஆலோசனைகள் மீதான கருத்துகளைத் தெரிவிக்க 2022-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதில், 45 ஆதரவாக கருத்துகளும், நான்கு எதிர்மறையான நான்கு கருத்துகளையும் ஆணையம் பெற்றது.

பயனர்களுக்கு எளிதான, வெளிப்படையான மற்றும் பதிலளிக்க கூடிய டிஜிட்டல் ஒற்றைச் சாளர அமைப்பு நிறுவப்பட வேண்டும். துறைகளுக்கு இடையேயான ஆன்லைன் செயல்முறைகளை இறுதி வரை அடைய புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் போர்ட்டல் இயக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு அமைச்சகமும் ஒரு நிலையான எளிதாக வணிகம் செய்வது குறித்த குழுவை நிறுவி, தற்போதுள்ள செயல்முறைகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யவும், எளிமைப்படுத்தவும், புதுப்பிக்கவும், எளிய வணிகத்தை உறுதி செய்யவும் வேண்டும். அரசு துறைகள் ஆரம்ப மற்றும் கூடுதல் அனுமதிகள் உட்பட அனைத்து செயல்முறைகளுக்கும் காலக்கெடுவைக் குறிப்பிட வேண்டும்.

Vignesh

Next Post

குட் நியூஸ்...! ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சரிபார்க்க ஆணையம் அனுமதி...!

Wed May 3 , 2023
பயனாளிகள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் குடியிருப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில், தங்களுடைய ஆதார் எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் தெரியவில்லை என்பது யுஐடிஏஐ கவனத்திற்கு வந்தது. எனவே ஆதாருடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் வேறு ஏதேனும் எண்ணுக்குப் போய்விடுமோ என மக்கள் கவலைப்பட்டனர். இப்போது, இந்த வசதியின் […]

You May Like