fbpx

ரயில் விபத்து!… ரூ.5 லட்சம்!… நிவாரண தொகை 10 மடங்கு உயர்த்தி வழங்கப்படும்!… ரயில்வே வாரியம் அதிரடி!

ரயில் விபத்துகள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களில் இறந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண தொகையை மேலும் கூடுதலாக வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ரயில் விபத்துகள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களில் இறந்த மற்றும் காயமடைந்த பயணிகளின் உறவினர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை நிவாரணத் தொகையை இப்போது திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேனுவல் லெவல் கிராசிங் கேட் விபத்தில் ரயில்வேயின் முதன்மைப் பொறுப்பின் காரணமாக விபத்துக்குள்ளானவர்களுக்கு கூடுதல் கருணைத் தொகை நிவாரணம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஆளில்லா லெவல் கிராசிங் விபத்துகளில் இறந்த பயணிகளின் உறவினர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் அந்த தொகை ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் ரூ.2.5 லட்சமும் வழங்கப்படும் என்றும் சாதாரண காயம் உள்ள பயணிகளுக்கு முன்பு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. இனிமேல் 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெர்விக்கப்பட்டுள்ளது.

மேலும் விரும்பத்தகாத சம்பவங்களான தீவிரவாத தாக்குதல், வன்முறை தாக்குதல் மற்றும் ரயிலில் கொள்ளை போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு முன்பு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. அந்த தொகை தற்போது ரூ.1.50 லட்மும், படுகாயமடைந்தவர்களுக்கு முன்பு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.50 ஆயிரமும். காயம் அடைந்தவர்களுக்கு முன்பும், இப்போதும் ரூ.5,000 வழங்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் விபத்துகள் ஏற்பட்டால் 30 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு 10 நாள் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தினத்திற்கு முன்பு வரை ஒவ்வொரு நாளும் ரூ.3 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும். விரும்பத்தகாத சம்பவத்தில் கடுமையான காயம் ஏற்பட்டால், ஒவ்வொரு 10-நாள் காலத்தின் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதியின் முடிவில் ஒரு நாளைக்கு ரூ. 1,500 விடுவிக்கப்படும். மேலும் ஆறு மாதங்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளித்து நிதி உதவி செய்யப்படும்.

அதன்பிறகு அடுத்த 5 மாதத்திற்கு ஒவ்வொரு 10 நாள் காலத்தின் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதியின் முடிவில் ஒரு நாளைக்கு ரூ 750 நிதி வழங்கப்படும். ஆனால் ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து ஏற்பட்டால், அத்துமீறி நுழைபவர்க ளுக்கு எந்தவிதமான கருணைத் தொகையும் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது

Kokila

Next Post

#Breaking: கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

Thu Sep 21 , 2023
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர் , திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை […]

You May Like