fbpx

ஒடிசா ரயில் விபத்து கடைசி 13 வினாடிகள்…..! விபத்து நடந்ததற்கான உண்மையான காரணம் இதுதான்…..!

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தொடர்வண்டி துறை விமான போக்குவரத்துக்கு பிறகு மிகப்பெரிய போக்குவரத்து துறையாக பார்க்கப்படுகிறது பொதுமக்கள் நேரம் மற்றும் கட்டண குறைவு காரணமாக, அதிக அளவில் ரயில் பயணத்தை தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ரயில் பயணத்தில் இப்படியான கோர சம்பவங்களும் அவ்வப்போது நடந்த வண்ணம் தான் இருக்கிறது. தற்போது ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள ரயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் நேற்று இரவு கல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சென்னை கோரமண்டல் விரைவு ரயில் பாகாநாகா பஜார் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று இரவு 7:20 மணி அளவில் நடைபெற்றுள்ளது இதற்கான மீட்பு பணிகள் தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. அதோடு தடம் புரண்ட பெட்டிகளில் யாராவது பயணிகள் சிக்கி இருக்கிறார்களா? என்றும் மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து உயர்மட்ட குழு அமைத்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இத்தகைய நிலையில்தான் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக ரயில்வே துறையின் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு தன்னுடைய அறிக்கையை தற்போது சமர்ப்பித்து இருக்கிறது. அந்த குழு தன்னுடைய அறிவையும் கோரமண்டல் விரைவு ரயிலுக்கு பிரதான வழி தடத்தில் செல்வதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டதாகவும், ஆனாலும் அந்த சிக்னல் அதன் பிறகு கண்டுபிடித்து இருக்கிறது.

இதனால் கோரமண்டல் ரயில் அருகில் உள்ள இணைப்பு பாதையில் ஓடத் தொடங்கிய போது அங்கு இருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இணைப்பு பாதையில் கோரமண்டல் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டு உள்ளது என்று அந்த அறிக்கையின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த பெங்களூரு ஹவுரா விரைவுரையிலும் அந்த இரண்டு ரயில்கள் மீது மோதியதாக அந்த அறிக்கையின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் பெங்களூரு ஹவுரா விரைவு ரயில் 3️ பெட்டிகள் தடம் புரண்டு உள்ளனர்.

ஆனாலும் முதலில் கோரமண்டல் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டு அதன் பிறகு எதற்காக வாபஸ் பெறப்பட்டது? என்பதற்கான காரணங்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. எப்படி பார்த்தாலும் ரயில்வே சிக்னல் பிழையின் காரணமாக, தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதற்கு நடுவே இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்திருக்கிறது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

Next Post

இந்தியாவில் 74.5 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கம்..

Sat Jun 3 , 2023
மெடா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, பயனாளர்களுக்கு குறிப்பாக இந்தியர்களை குறிவைத்து புதிய பிரச்னை சமீபத்தில் வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் இந்தியர்களுக்கு அழைப்பு வருகிறது. குறிப்பாக […]
whatsapp

You May Like