fbpx

இரட்டை இலை சின்னம் முடக்கம்..! வழக்கு தொடர்ந்த முன்னாள் உறுப்பினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்..!

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி வழக்கு தொடர்ந்த அதிமுக முன்னாள் உறுப்பினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவு செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்ததாகவும், ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையிலான உட்கட்சி மோதல் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தான் மனு அனுப்பிய நிலையில், இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும் எனவே, தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட மனு தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.50 கோடி கொடுத்தேனா... இல்லவே இல்லை என மறுக்கும்  டிடிவி!!

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், விளம்பர நோக்கத்துடன் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறி, இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி வழக்கு தொடர்ந்த அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜோசப்புக்கு ரூ.25,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chella

Next Post

இபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

Thu Jul 7 , 2022
சென்னையில் கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் […]

You May Like