fbpx

இரத்த தானம் செய்வதில் இருந்து திருநங்கைகளுக்கு விலக்கு!. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Supreme Court: ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்கள் ரத்த தானம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மருவிய பாலினத்தவர் (Transgender), ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்கள் (Gay men), பெண் பாலியல் தொழிலாளர்கள் ஆகியோர் ரத்த தானம் செய்ய தேசிய ரத்த மாற்று கவுன்சிலும் (NBTC) தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பும் தடை விதித்து சமீபத்தில் வழிகாட்டுதல் வெளியிட்டது.

இந்த வழிகாட்டுதல்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்பு கொண்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரிக்க இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் உத்தரவு பிறப்பித்தார்.

இபாத் முஷ்டாக் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், “ரத்த தானம் செய்பவர் தொடர்பாக NBTC and NACO வெளியிட்ட வழிகாட்டுதல்கள் அரசியலமைப்பு சட்டம் 14, 15, 17 மற்றும் 21 வது பிரிவுகளின் கீழ் உறுதி செய்யப்பட்ட சமத்துவம், கண்ணியம் மற்றும் வாழ்க்கைக்கான உரிமையை மீறுவதாக உள்ளது.

பிரச்னைக்குரிய இந்த உத்தரவு, 1980களில் அமெரிக்காவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட பாகுபாடு மிக்க கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்த பார்வையை மறுபரிசீலனை செய்துள்ளன.

ரத்த தானம் செய்பவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அந்தந்த அரசுகள் வெளியிட்டுள்ளன. ரத்த தானம் மீதான இந்த கட்டுப்பாடு ஒரு குறிப்பிட்ட குழுவினர் பாலியல் ரீதியாக பரவும் நோய்களால் பாதிக்கப்படலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

ரத்த தானம் செய்யப்படுவதற்கு முன்பு முறையான பரிசோதனை நடத்தப்படுகிறது. மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் கல்வி, குறிப்பாக ரத்தவியல் துறை மிக வேகமாக முன்னேறி வரும் காலத்தில், தன்பாலின ஈர்ப்பாளர்களை மிகவும் பாரபட்சமான முறையில் நடத்தப்படும் பார்வையில் இருந்து வெளிப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Readmore: ”எதிர்காலத்தில் காத்திருக்கும் ஆபத்து”..!! ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

English Summary

Exclusion of transgenders from donating blood: Supreme Court issues notice to Centre on plea challenging bar

Kokila

Next Post

நோட்...! இந்த 3 மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை...! பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்...!

Sat Aug 3 , 2024
A local holiday has been declared today in Salem, Erode and Tirupur districts

You May Like