ரயில் பயணிகளிடம் இருந்து புகார் வரும் வகையில், நடந்து கொள்ளக் கூடாது என திருநங்கைகளுக்கு ரயில்வே போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
பெரும்பாலான திருநங்கைகள் நன்கு படித்துவிட்டு கவுரமான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நல்ல நிலையில் இருக்கும் திருநங்கைகள் அறக்கட்டளையை தொடங்கி கஷ்டத்தில் இருக்கும் திருநங்கைகளுக்கு உதவி செய்து வருகிறார்கள். கொரோனா, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு கூட இவர்கள் உதவிகளை செய்திருந்தனர். அது போல் பெற்றோரும் தாங்கள் திருநங்கை, திருநம்பி என தெரியவந்தால் வீட்டை விட்டு அடித்து துரத்தாமல் கல்வியை கொடுக்க வேண்டும் என திருநங்கைகள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், முன்பை விட அவர்களுடைய வாழ்க்கை தரம் ஓரளவு உயர்ந்துவிட்டதாகவே கூறுகிறார்கள்.
இப்படி மகிழ்ச்சிகரமான பக்கங்கள் இருந்தாலும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைகள், கோயில்களில் சில திருநங்கைகள் பொதுமக்களிடமும், பயணிகளிடமும் பணம் கேட்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது போல் பணம் கேட்கும் போது இரு வேறு விதமான பிரச்சனைகள் எழுகின்றன. ஒன்று பணம் இல்லை என சொன்னால் சில திருநங்கைகள் அசிங்கமாக பேசுவதும் தாக்குதலில் ஈடுபடுவதுமான செயல்களை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அதுபோல் மீண்டும் மீண்டும் பணம் கேட்கும் திருநங்கைகளை பொதுமக்களும், பயணிகளும் ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களால் தாக்குதல் சம்பவங்கள் ஏற்படுகின்றன.
சென்னை இருப்புப்பாதை காவல் மாவட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொல்லை செய்வதாகவும், சில சமயங்களில் பயணிகளிடம் அத்துமீறி நடந்துக் கொள்வதாகவும் இருப்புப்பாதை காவல் உதவி மையத்துக்கு அடிக்கடி புகாா்கள் வந்தன. கடந்த சில நாள்களுக்கு முன் மீஞ்சூா் ரயில் நிலையத்தில் திருநங்கையுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு பயணி மரணம் அடைந்தாா். திருவொற்றியூா் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்ற திருநங்கையின் கால் துண்டானது. சங்க உறுப்பினா்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி இனி இதுபோன்ற புகாா்கள் ஏதும் வராமல் பாா்த்துக்கொள்ள வலியுறுத்தினாா். தொடா்ந்து புகாா்கள் வரும் பட்சத்தில் அவா்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினா்.