வட அமெரிக்காவின் கொலம்பியாவில் விமான சக்கரத்தில் அமர்ந்து பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கொலம்பியாவில் பொகோட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு சிலி நாட்டின் ஏவியன்கா விமானம் ஒன்று வந்து தரை இறங்கியது. விமானம் நின்றவுடன் பயணிகள் ஒவ்வொருவராக கீழே இறங்கி கொண்டு இருந்தனர். பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் விமான ஊழியர்கள் விமானத்தில் வழக்கமான பராமரிப்பு பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் மனித உடல்கள் தொங்கி கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அருகில் சென்று பார்த்த போது 2 இளைஞர்கள் சக்கரத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு அந்த உடல்களை விமான நிலைய அதிகாரிகள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இளைஞர்கள் சட்ட விரோதமாக விமானத்தின் சக்கரத்தில் அமர்ந்து பயணம் செய்தபோது உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.இளைஞர்களிடம் இருந்த ஆவணங்களை பார்த்தபோது அவர்கள் இருவரும் டொமானிக்கன் குடியரசு நாட்டை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டது.