திமுக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான திருச்சி சிவாவின் மகன் தான் திருச்சி சூர்யா. முதலில் திமுகவில் செயல்பட்டு வந்த அவர், பின்னர் அதிருப்தி காரணமாக திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இருந்து தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது எந்த கட்சியில் இல்லை என்றாலும் தமிழக அரசியல் களம் குறித்து தொடர்ந்து யூ டியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் பிரபல யூ டியூப் சேனலுக்கு திருச்சி சூர்யா அளித்த பேட்டியில், தவெக தலைவரும், நடிகருமான விஜய்க்கு திருச்சி சூர்யா பகிரங்கமாக ஒரு சவால் விடுத்துள்ளார்.
அதில் பேசிய அவர் “ நேரடியாக விஜய்க்கு ஒரு சவால் விடுகிறேன். ஒரே ஒரு நாள், மாலை 6 மணிக்கு மேல், விஜய்யை ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்ள சொல்லுங்கள். இரவு நேரத்திலும் அரசியல் கட்சி தலைவராக விஜய் வெளியே வர வேண்டும். எல்லா கட்சிகளும் மாலையில் தான் கூட்டம் நடத்துவார்கள். ஆனால் தவெகவில் மட்டும் ஏன் மதிய நேரங்களில் மீட்டிங் நடத்துவதில்லை. விஜய்யால் 6 மணிக்கு குடிக்காமல் இருக்க முடியாது. 6 மணிக்கு மேல் அவர் வெளியே வரமட்டார். இப்படிப்பட்ட தலைவரிடம் ஆட்சியை கொடுக்க முடியுமா?
என்னது விஜய் டோப்பு பார்டியா 😂😂 6 மணிக்கு மேல வெளிய வர முடியாதா 😂 pic.twitter.com/swRr44znef
— மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) May 1, 2025
குடிப்பதில் தவறு கிடையாது. ஆனால் இத்தனை மணிக்கு மேல் என்னால் குடிக்காமல் இருக்க முடியாது என்று இருக்கும் நபரை எப்படி குறை சொல்லாமல் இருக்க முடியும். ஒரு நடிகராக நீங்கள் எப்படி வேண்டுமானால் இருக்கலாம்.. யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அரசியல் தலைவராகிவிட்டேன். மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன்.. ஆட்சியை கொடுங்கள் என்று கேட்கிறீர்கள்.. நாங்கள் எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்.
ஒரே ஒரு நாள் மட்டும், மாலை 5 மணியில் இருந்து 8.30 மணி வரை விஜய்யை மேடையில் உட்கார சொல்லுங்கள். அவரால் முடியாது. எனவே, விஜய் மாலை 6 மணிக்கு வெளியே வந்து, 9 மணி வரை பொதுமக்களிடம் நின்று பேசிவிட்டு செல்ல வேண்டும்” என்று சவால் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.