ரயில்வே ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தில் 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசும் பல மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது ரயில்வே வாரியமும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரயில்வே வாரியம் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (Dearness Allowance) அடிப்படை சம்பளத்தில் 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த முறையும் ரயில்வே வாரியம் டிஏவை 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும். 23 அக்டோபர் 2023 அன்று ‘அனைத்திந்திய ரயில்வே மற்றும் உற்பத்தி பிரிவுகளின்’ பொது மேலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு வாரியம் இது தொடர்பாக ஒரு கடிதம் எழுதியது.
அகில இந்திய ரயில்வே மற்றும் உற்பத்தி பிரிவுகளின் பொது மேலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அக்டோபர் 23, 2023 அன்று எழுத்துப்பூர்வமாக அனுப்பிய கடிதத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை தற்போதுள்ளதை விட உயர்த்துவது குறித்து முடிவு செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அகவிலைப்படி 42% -இலிருந்து 46% ஆக உயரும் என்றும் இது ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 7வது CPC பரிந்துரையின்படி பெறப்படும் ஊதியம் ‘அடிப்படை ஊதியம்’ என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு ஊதியம் போன்ற வேறு எந்த ஊதியத்தையும் இது உள்ளடக்கவில்லை. ரயில்வே ஊழியர்களின் (Railway Employees) அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதற்கான இந்த முடிவை எடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ரயில்வே வாரியம் எழுதியுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி தற்போது இருந்த 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும்.
சமீபத்தில் 15,000 கோடி போனஸுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து ரயில்வே வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போனஸ் அறிவிப்பின்படி அவர்கள் 78 நாள் ஊதியத்தையும் பெற இருக்கிறார்கள். இவை அனைத்தையும் தீபாவளிக்கு முன்னதாக ரயில்வே ஊழியர்கள் பெற இருக்கின்றனர்.