திருப்பூரில் கடைகளில் திருடியது எவன் பார்த்த வேலைடா இது ….. திருடிய கடையில் சாக்லேட் சாப்பிட்டுவிட்டு கடை வாசலில் மலம் கழித்த திருடன் … திருப்பூரில் அதிர்ச்சி!மட்டுமல்லாமல் திருடிய கடை வாசலிலேயே மலம் கழித்து வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூரின் கேவிஆர் நகர் பகுதியில் திருமலை காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் ஜவுளி கடைகள் மளிகை கடைகள் என பல கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று இந்த வணிக வளாகத்தில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடையை பூட்டி விட்டு சென்ற பிறகு அங்கிருந்த கடைகளுக்குள் புகுந்த திருடன் மொத்தமாக ஐந்து கடைகளில் கைவரிசையை காட்டி இருக்கிறான்.
வரிசையாக ஐந்து கடைகளில் பூட்டை உடைத்து அவற்றில் இருந்த பணத்தை திருடி சென்று இருப்பது அடுத்த நாள் காலை தெரிய வந்திருக்கிறது. மேலும் அங்கிருந்த மளிகை கடையில் புகுந்து திருடிய போது கடைகளில் இருந்த சாக்லேட்டையும் திருடி சாப்பிட்டுவிட்டு கடை வாசலிலேயே மலம் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று காலை கடை திறக்க வந்தபோது பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் கடைக்குள் சென்று பார்த்த போது திருட்டு சம்பவம் நடந்தது தெரிந்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.