மத்திய பிரதேசத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது மண்ணை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே என்று இரு பெண்களும் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மண் சுமந்து நின்ற டிரக்கின் முன் அமர்ந்து இரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த டிரக்கில் இருந்த மண் இரண்டு பெண்களின் மீதும் கொட்டப்பட்டதால் கிட்டத்தட்ட அவர்கள் முழுதாக மண்ணில் புதைந்தனர். உடனே அருகில் இருந்த கிராமவாசிகள் அந்த பெண்களை மீட்டு, சிகிச்சைக்காக நலவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் மண்ணில் இருந்து மீட்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. என்றாலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சம்பந்தபட்ட டிரக்கைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இதில் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளர். தப்பியோடிய இருவரைத் தேடி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read more ; சென்னையில் நாளை முதல் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்..!!