அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில், சிகாகோவில் நடந்த கருப்பின பத்திரிக்கையாளர்கள் தேசிய சங்கத்தின் மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் மீது இனவெறி கருத்தை தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில்,” கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவர். அவர் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கருப்பினத்தவராக மாறும் வரை அவர் கருப்பினத்தவர் என்று எனக்குத் தெரியாது. கமலா ஹாரிஸ் தற்போது கருப்பினத்தவறாக அறிய விரும்புகிறார்.
இதனால் அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? என்பது எனக்கு தெரியவில்லை. நான் அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் அவர் வெளிப்படையாக இல்லை. ஏனென்றால் அவர் எல்லா வழிகளிலும் இந்தியராக இருந்தார். பின்னர் திடீரென்று கருப்பினத்தவராகி விட்டார் என பேசியிருந்தார். பத்திரிகையாளர் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கமலா ஹாரிஸின் இனம், நிறம் என்பவற்றை குறிப்பிட்டு இனவெறி கருத்தை தெரிவித்தமை மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை கருத்துகளுக்கு இடையே, தற்பொழுது டொனால்ட் ட்ரம்ப்பின் குறித்த பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமலா ஹாரிசின் தாய் இந்தியாவை (India) சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை (Jamaica) சேர்ந்தவர். அந்தவகையில், அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய-அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆவார் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.
https://truthsocial.com/@realDonaldTrump/112887108527191005
Read more ; ‘தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்’ இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு அரசு வழங்கிய அறிவுரை..!!