பல விதமான பிரியாணியை நாம் சாப்பிட்டு இருப்போம். சைவம் அசைவம் என்று அனைத்திலும் பல விதமான பிரியாணி உள்ளது. வாத்து, கோழி, காடை என்று பல விதமான அசைவ பிரியாணி உள்ளது. ஆனால் இந்த பிரியாணியை பலர் கேள்வி பட்டிருக்க மாடீர்கள். உங்கள் இந்த பிரியாணி சற்று புதுசாக தான் இருக்கும். அப்படி என்ன பிரியாணி தெரியுமா?? கருவாட்டு பிரியாணி. கேட்பதற்கு சற்று வித்யாசமாக தான் இருக்கும். ஆனால் இதன் சுவை அற்புதமாக இருக்கும். இதை செய்வதும் சுலபம் தான். காருவட்டில் குழம்பு, வருவல், தொக்கு செய்தே சாப்பிட்டுப் பழகியிருப்போம். இந்த முறை கருவாட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள்..
கருவாட்டு பிரியாணி செய்ய முதலில், அரிசியை கழுவி, தண்ணீரில் ஊற வைக்கவும். அதேபோல கருவாட்டையும் நன்றாக கழுவி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். ஒரு வாணலியை ஈரம் போக காய வைத்து, கருவாடு பொரித்த எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் தயிர் சேர்க்கவும்.
பின்னர் உப்பு, வறுத்த கருவாட்டை போட்டு நன்கு வேக விடவும். பிறகு வழக்கம் போல் ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் டம்பளர் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றி, கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிடுங்கள். கடைசியாக சிறிது நெய், கொத்தமல்லி, லெமன் பிழிந்து பரிமாறலாம். இப்போது சுவையான கருவாட்டு பிரியாணி ரெடி..