வீட்டை சுத்தம் செய்வதே ஒரு பெரிய வேலை. அதிலும் குறிப்பாக பாத்ரூமை சுத்தம் செய்வது மிக கடினமா வேலையாக உள்ளது. மார்க்கெட்டில் விதவிதமாக பவுடர்கள், லீகுய்ட்கள் இருந்தாலும் அவை கடினமான கறைகளை போக்குவதில்லை. உப்புக்கறை மற்றும் கடிமான அழுக்குகளை போக்க எப்போதும் வீட்டில் அவ்வப்போது தயாரித்து உபயோகிக்கும் கலவைகளே சிறந்த சுத்தத்தை கொடுக்கிறது. அந்த வகையில் 2 சிறந்த கலவைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்..
முதலாவதாக நம் அன்றாடம் பயன்படுத்தும் பல் துலக்கும் பேஸ்ட்டின் மூலம் செய்யும் கலவை. இதற்கு சிறிதளவு பல் துலக்கும் பேஸ்டுடன் அரை எலும்மிச்சம்பழ சாறு சேர்க்க வேண்டும் அதனுடன் சிறிதளவு சோடா உப்பு சேர்ந்து நன்றாக கலக்க வேண்டும். பின்பு கைகளில் பாதுகாப்பு உறை அணிந்து இந்த கலவையை உப்பு கறை படிந்துள்ள இடங்களிலும் குழாய்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு சுத்தமான நீரில் கழுவினால் உப்புக்கறை மாயமாக மறைவதை காணலாம்.
இரண்டாவதாக கோலமாவுடன் மூன்று ஸ்பூன் சோடா உப்பு சேர்ந்து எடுத்து கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு ஸ்பூன் துணி துவைக்கும் பொடி சிறிதளவு கலந்து எடுத்து அதிகம் அழுக்குள்ள இடங்களில் தேய்த்து ஊறவிட வேண்டும். பின்பு சுத்தம் செய்தால் சிறந்த பொலிவை காணலாம்.