fbpx

பளிச்சிடும் சரும பொலிவிற்கு சிம்பிள் ஹோம் ஃபேஷியல் பேக்… மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.!

நம் முகத்தை அழகாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை மற்றும் எண்ணமாக இருக்கும். எந்த வயதை உடையவர்களாக இருந்தாலும் தங்கள் அழகை பராமரிப்பதில் அனைவரும் கவனம் செலுத்தவே நினைப்போம். இதற்காக பியூட்டி பார்லர் மற்றும் உயர்ரக அழகு சாதன பொருட்களுக்கு பணத்தை செலவு செய்யாமல் வீட்டில் இருக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களைக் கொண்டு முகத்தை பளபளப்பாக மாற்றும் ஒரு பேசியல் பேக் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்த எளிமையான பேஷியல் பேக் செய்வதற்கு எலுமிச்சை சாறு 3 டீஸ்பூன் காபி பவுடர் 1 டீஸ்பூன் மற்றும் மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சுத்தமான பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் 1 டீஸ்பூன் காபி பவுடர் மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதன் பிறகு 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக பேஸ்ட் பதத்தில் வரும்வரை கலக்க வேண்டும். இந்தக் கலவை நன்றாக பேஸ்ட் பதத்தில் வந்ததும் நமது பேசியல் பேக் தயாராகிவிட்டது.

இப்போது முகத்தை நன்றாக தண்ணீரில் கழுவி இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். நன்றாக அப்ளை செய்து விட்டு மெதுவாக முகத்தில் மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் நன்றாக ஊறவிட்டு பின்னர் முகத்தை கழுவ வேண்டும். முகத்தை கழுவிய பின் காட்டன் துணியால் நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகம் நல்ல பளபளப்பாகும். மேலும் சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் உயிர் பெற்று சருமத்திற்கு நல்ல பொறிவை கொடுக்கும். எலுமிச்சியில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களைப் போக்க உதவுகிறது. மஞ்சளில் இருக்கும் கிருமி நாசினி பண்புகள் கிருமித்தொற்று தொற்றுக்களில் இருந்து முகத்தை பாதுகாப்பதோடு பருக்கள் வராமலும் தடுக்கிறது.

Next Post

குளித்து முடித்தவுடன் இயர் ப்ளக்ஸ் போடும் பழக்கம் உடையவரா நீங்கள்… இந்த ஆபத்தை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.!

Sun Nov 26 , 2023
குளித்து முடித்தவுடன் காதுகளுக்கு இயர் ப்ளக்ஸ் பயன்படுத்தும் பழக்கம் அனேகமான மக்களிடம் இருக்கிறது. இவ்வாறு இயர் ப்ளக்ஸ் பயன்படுத்துவதால் காதுக்குள் இருக்கும் அழுக்கு வெளியேற்றப்படுவதோடு காதுகளில் நீர் தேங்கி அதனால் ஏற்படும் காது வலி போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இயர் ப்ளக்ஸ் பயன்படுத்துவது நம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.? அதனைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாக காணலாம். […]

You May Like