fbpx

அளவில் சிறிய கார்களை உருவாக்க முயற்சி!… டெஸ்லா வெளியிட்ட புதிய தகவல்!… எலான் மஸ்க்கின் அடுத்த திட்டம்!…

அளவில் சிறிய கார்களை உருவாக்கி வருவதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. இந்த நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மிகப் பெரிய அளவிலான டெஸ்லா ஆலை இயங்கிவருகிறது. மேலும்அமெரிக்காவில் மட்டும் இரண்டு தயாரிப்புத் தொழிற்சாலைகள் டெஸ்லாவுக்கு இருக்கின்றன. கூடவே ஷாங்காய், சீனா என்று பல நாடுகளிலும் ஃபேக்டரி இருக்கிறது. உலகம் முழுவதும் டெஸ்லாவில் சுமார் 99,000–க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள்.

இந்நிலையில் அடுத்த தலைமுறை டெஸ்லா கார் குறித்து முக்கிய தகவலை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதாவது அளவில் சிறிய எலெக்ட்ரிக் கார்களை உருவாக்க முயற்சித்து வருவதாக கூறியுள்ளார். இதன் விலை நடுத்தர மக்களுக்கு ஏற்றதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். டெஸ்லா மாட 3 காரை தயாரிக்க ஆகும் செலவில் 50 சதவீத செலவே தற்போது தயாரிக்க இருக்கும் புதிய காருக்கு தேவைப்படும் என்று எலான் மஸ்க தெரிவித்தார். மேலும் இந்த கார் முழுவதும் தானாகவே இயங்கும் வகையில் தயாரிக்கப்பட இருப்பதாகவும் மேலும் இதை உருவாக்குவதற்கு இன்னும் கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களை எல்லோரும் பயன்படுத்த விரும்புகிறார்கள், ஆனால் எல்லோராலும் வாங்கக்கூடிய அளவுக்கு விலை இல்லை என்று கருத்து நிலவி வந்த நிலையில் எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Kokila

Next Post

வந்தது அதிரடி உத்தரவு...! மத்திய அரசின் உதவித்தொகையை பெற இதையும் கட்டாயம் இணைக்க வேண்டும்...!

Fri Mar 10 , 2023
மத்திய அரசின் உதவித்தொகையை பெறும் வகையில் மாணவர்கள் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கை இணைக்க உத்தரவு. 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை அளிக்கும் NMMS திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் மேல்நிலைக் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய கல்வி துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 6,695 […]

You May Like