பிரபல யூடியூபர் TTF வாசன் பைக்கில் சென்றபோது காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து தலையில் காயம் ஏற்பட்டதால் ICU-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் பைக் ஸ்டண்ட் செய்ய முயன்ற யூடியூபர், TTF வாசன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்து நடந்தபோது வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவைக்கு சென்று கொண்டிருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தின் வீடியோவில், வாசன் நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் உள்ள முட்புதரில் வீசப்பட்டார். இந்த விபத்தில் அவரது வாகனம் சுக்கு நூறாக நொறுங்கியது.
அதிர்ஷ்டவசமாக கீழே விழுந்த வாசன் உயிர் பிழைத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கியதால் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.