அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அங்கம் வகித்து வருகிறார். மேலும், அவர் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தனது கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்.
இன்று கூட்டணி குறித்து அதிமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து அமித்ஷா ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது அதிமுக இணைப்பு குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, பாஜக மாநில தலைவரை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானாலும், அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனை சென்றுள்ளார் என்றும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.