fbpx

மூளையில் கட்டி..!! செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சையா..? மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே, அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையும் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 10 முறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அறுவை சிகிச்சை செய்யாமல் கணையத்திலும், மூளை பகுதியிலும் உள்ள கட்டிகளை மருந்துகளால் கரைக்க திட்டமிட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூளையில் ஏற்பட்டுள்ள கட்டியால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதுகுத்தண்டில் வலி ஏற்படுகிறது.

கை, கால் மரத்துப் போகாமல் இருக்க தினமும் இரண்டு முறை பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு ஜாமீன் கோரியுள்ள நிலையில், தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Chella

Next Post

2024-க்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு அட்டவணை..!! தேர்வர்களே ரெடியா..? வெளியான குட் நியூஸ்..!!

Sat Nov 25 , 2023
2024ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு அட்டவணை டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பும், 15 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி. நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் […]

You May Like