fbpx

துருக்கி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. 66 பேர் பலி..!! 51 பேர் காயம்..

வடமேற்கு துருக்கியில் உள்ள ஸ்கை ரிசார்ட்டில் உள்ள 12 மாடிகளைக் கொண்ட கிராண்ட் கார்டால் ஹோட்டலின் உணவகத்தில் அதிகாலை 3:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹோட்டலில் 234 விருந்தினர்கள் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பீதியில் கட்டிடத்திலிருந்து குதித்து இறந்ததாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் விருந்தினர்கள் பெட்ஷீட்கள் மற்றும் போர்வைகளைப் பயன்படுத்தி தங்கள் அறைகளிலிருந்து கீழே இறங்க முயற்சிப்பதை உள்ளூர் ஊடகங்களும் விவரித்தன. இணையத்தில் வெளியான காட்சிகளின்படி, ஹோட்டலின் கூரை மற்றும் மேல் தளங்கள் தீப்பிடித்து எரிவதைக் காட்டியது, பின்னணியில் பனி மூடிய மலையுடன் வானத்தில் புகை மூட்டங்கள் காணப்பட்டனர்.

பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் ஹோட்டல் 80-90% நிரம்பியது. விடுமுறையை கழிக்க 234 விருந்தினர்கள் வந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, 30 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 28 ஆம்புலன்ஸ்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலுள்ள பிற ஹோட்டல்கள் வெளியேற்றப்பட்டன, விருந்தினர்கள் அப்பகுதியில் உள்ள மற்ற தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இஸ்தான்புல்லுக்கு கிழக்கே 300 கிலோமீட்டர் (185 மைல்) தொலைவிலும் , தலைநகர்  அங்காராவின் வடமேற்கே 170 கிலோமீட்டர் (100 மைல்) தொலைவிலும் உள்ள கொரோக்லு மலைகளில் உள்ள ஒரு பிரபலமான ஸ்கை ரிசார்ட் கர்தல்காயா இருக்கிறது. இந்த தீ விபத்தில் இதுவரை 66 பேர் உயிர்ழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 51 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://twitter.com/i/status/1881640106949500974

Read more ; சூப்பர்…! PM Kissan உதவித்தொகை… வரும் 24-ம் தேதி விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்…!

English Summary

Turkiye: 66 dead, 32 injured after hotel with 234 guests catches fire in Bolu province

Next Post

“நான் உன்ன மட்டும் தான் டி கல்யாணம் பண்ணுவேன்” பாசமாக பேசிய வாலிபர், நம்பி தோப்புக்குள் சென்ற பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!!!

Tue Jan 21 , 2025
school girl was sexually abused by a young man and his friend

You May Like