fbpx

கசப்பை சுவையாக மாற்றும்!… உப்பில் இத்தனை அதிசயங்களா?… தெரிஞ்சுகோங்க!

உப்பு(Salt) சுவைக்கு மட்டுமில்ல ஐம்புலனுக்கும் விருந்தளிக்கக்கூடிய முக்கிய படைப்பாகும். அதேபோல உணவுத் தேவையில் இருந்து மருத்துவத் தேவைகள் வரையிலும் பல்வேறு பிரச்னைகளை தீர்ப்பதற்கு உப்பு முக்கிய காரணியாக உள்ளது.  மனிதனின் பண்பு நலனுக்கும் உவமையாக சொல்லப்படும் உப்பு குறித்து அறிந்திராத பல தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்

உங்களுடைய கசப்பான காஃபியைக் கூட சுவையாக மாற்றக்கூடிய பண்பு உப்பில் உண்டு என்று கூறினால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. இதேபோல், நம்முடைய வீடுகளில் அலங்கார பொருட்களாக பல்வேறு செயற்கை பூக்கள் வைக்கப்பட்டு இருக்கும். பட்டுத் துணி மற்றும் நைலான் கொண்டு தான் பல்வேறு செயற்கை பூக்கள் தயாரிக்கப்படுகின்றன. அதை சுத்தம் செய்வதற்கு உப்பு தேவைப்படுகிறது. ஜிப் லாக் பைக்குள் செயற்கை பூக்களை போடவும். அதனுடன் ஒரு குவளை உப்பினைக் கொட்டி நன்றாக குலுக்கி எடுக்கவும். இதன்மூலம் பூக்களிலுள்ள தூசி துகள்கள் தனியாக வந்துவிடும். இந்த செயற்கைப் பூக்கள் எப்போதும் புதுப்பொலிவுடன் இருக்கும்

உங்களுடைய சட்டையில் வையின் போன்ற கடினமான அழுக்குப் படிந்துவிட்டால், அதன்மேல் ஒரு ஸ்பூன் உப்பினை தூவிவிட்டு சிறிதுநேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். அதையடுத்து சட்டையை நன்றாக சோப்புப்பொட்டு அலசும் போது, அந்த அழுக்கு எளிதாக நீங்கிவிடும். அதேபோல வியர்வையின் காரணமாக சட்டையில் படியும் அழுக்கினைக் கூட உப்பு எளிதாக நீக்கிவிடும். 

எப்போதும் தேனீக்கள் கொட்டும்போது, அதனுடைய கொடுக்கு உடம்பில் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடும். அதை நன்றாக பார்த்து அகற்ற வேண்டும். அதையடுத்து, தேனீ கொட்டிய இடத்தை நன்றாக சுத்தம் செய்து, அதன்மீது உப்பினை தடவிட வேண்டும். அது காய்ந்தவுடன், வலி கொஞ்சம் கொஞ்சமாக குறையும். குளவி போன்ற வேறு ஏதாவது பூச்சிக் கடிக்கும் இந்த வழிமுறையை பின்பற்றுவது நல்ல தீர்வாக அமையும்.

புதியதாக துடைப்பம் வாங்கியவுடன் அதை சுடு தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அப்போது ஒரு கைப்பிடி உப்பை அதில் சேர்க்க வேண்டும். உப்பு மற்றும் துடைப்பத்தை சேர்த்து வைக்கக்கூடாது என்று எண்ணிவிட வேண்டும். இது ஒரு அறிவியல் சார்ந்த தகவலாகும். குறைந்தது 20 நிமிடம் துடைப்பது உப்பு கலந்த சுடு தண்ணீரில் ஊற வைத்து எடுப்பதன் மூலம், அதனுடைய ஆயுள் காலம் கூடுகிறது. விளக்குமாறு இன்னும் நீண்ட நாட்களுக்கு வரும். 

நாம் வாங்கும் முட்டை புதியதா அல்லது கெட்டுப்போனதா என்பதை உப்பை வைத்து கண்டறிய முடியும். ஒரு கப்பில் தண்ணீரை ஊற்றி, அதில் இரண்டு டேபுள் ஸ்பூன் உப்பை போடவும். அதற்கு முட்டையைப் போட்டால், புது முட்டை என்றால் எழும்பி மேலே வந்து மிதக்கும். அப்படி முட்டை எழும்பி வரவில்லை என்றால், அது கெட்டுவிட்டது என்று அர்த்தம். அதேபோல ஒரு ஸ்பூன் உப்பைப் போட்டு முட்டையை வேகவைத்தால், ஓடு எளிதாக உரிந்து வரும்.

Kokila

Next Post

அண்ணியுடன் காதலில் விழுந்த கணவன்; தந்தையின் கள்ளக்காதலால் தவிக்கும் 2 வயது குழந்தை..

Tue Oct 10 , 2023
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில், உப்பரபாளையத்தில் வசித்து வந்தவர், மணிகண்டன். இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் கொல்கத்தா மாநிலத்தில் இருந்த அவரது உறவினரான நந்தினி என்பவரை வரவழைத்து கடந்த 8 வருடங்கள் முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் வேலைக்கு சென்ற நந்தினி, வீடு திரும்பியது போது, தனது 2 வயது குழந்தையை […]

You May Like