101 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மேடையில் வைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவப் படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், 101 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமாக ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வால் நிறைய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதை கண்டித்தும் தேர்தல் நடைபெறுகிறது.
அத்துடன் மகளிர் பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் அவ்வப்போது உயர்த்தப்படும் மின் கட்டணத்தை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அதுபோல், தமிழக வளர்ச்சிக்கு இரு மொழி கொள்கையே தேவை, தமிழ்வழியில் பயின்றோருக்கு வேலைவாய்ப்புகள், பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு தனிச் சட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அது போல் முக்கியமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிகிறது.
அது போல் ஆளுநரின் சனாதனம் குறித்த கருத்து, தமிழ்நாட்டை தமிழகம் என பெயர் மாற்றக் கோரிய விவகாரம், நீட் மசோதாவில் கையெழுத்திட மறுப்பது உள்ளிட்ட விவகாரங்களுக்காக அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.