fbpx

உடலால் இணைந்த இரட்டை சகோதரிகள்!… தாயாக போவதாக நெகிழ்ச்சி பதிவு!

Twins: உடலால் இணைந்த அபி மற்றும் பிரிட்னி என்ற அமெரிக்க இரட்டைச் சகோதரிகள் இருவரும் தாயாக மாறத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு சகோதரிகளுக்கும் இரண்டு தலைகள் மற்றும் இரண்டு இதயங்கள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு உடல் மட்டுமே. 34 வயதான அபி மற்றும் பிரிட்னி ஆகியோர் தொழில் ரீதியாக ஆசிரியர்கள். Tv ரியாலிட்டி ஷோ மூலம் அபி மற்றும் பிரிட்னி அமெரிக்கர்கள் மற்றும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தனர். அப்பியும் பிரிட்னியும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக டெய்லிமெயில் இணையதளம் தெரிவித்துள்ளது.

அபி மற்றும் பிரிட்னியை திருமணம் முடித்தவர் 33 வயதான ஜோஷ் பவுலிங் எனும் அமெரிக்க இராணுவ அதிகாரி ஆவார். இந்தநிலையில், உடலால் இணைந்த அபி மற்றும் பிரிட்னி என்ற அமெரிக்க இரட்டைச் சகோதரிகள் இருவரும் தாயாக மாறத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அது எவ்வாறு செயல்படப் போகிறது என்பதைப் பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Readmore: பயங்கரம்!… உடல்கருகி 29 பேர் பலி!… கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் சோகம்!

Kokila

Next Post

"Myth vs Reality Register" தேர்தல் தொடர்பான போலி தகவல்...! புதிய இணையதளம் தொடக்கம்..‌!

Wed Apr 3 , 2024
தவறான தகவல்கள் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கும், தேர்தல் நடைமுறையின் நேர்மையை நிலைநிறுத்துவதற்கும், இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 பொதுத் தேர்தல்களின் ஒரு பகுதியாக ‘Myth vs Reality Register’ என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://mythvsreality.eci.gov.in/) மூலம் ‘Myth vs Reality Register’ பொதுமக்கள் அணுகலாம். உலக அளவில் பல ஜனநாயக நாடுகளில் தவறான தகவல்கள் மற்றும் தவறான கற்பிதங்கள் அதிகரிக்கும் கவலையாக மாறி […]

You May Like