fbpx

டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக மூடப்படுகின்றது!! பரபரப்பு !!

எலான்மஸ்க் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளதால் திணறிய டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சமூக வலத்தலமான டுவிட்டரை எலான் மஸ்க் கையகப்படுத்தினார். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் தொடர்ந்து சில அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார். அவர் அதிக லாபத்திற்காக தொடங்கவில்லை திவாலாவதை எதிர்கொள்ள நேரிடும் என கூறி பல மாற்றங்களை செய்தார். வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் கொள்கைளில் மாற்றங்கள் மேற்கொண்டார்.

ஊழியர்களை கூடுதல் வேலை செய்ய வேண்டும் என நிர்பந்தித்தார். 80 மணி நேரம் வேலை பார்க்கவும் நிர்பந்தம் செய்தார். ஏற்கனவே ஆயிரக்கணக்கானோரை வேலையில் இருந்து நீக்கினார். மேலும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடரும் எனவும் எச்சரித்தார். பணியில் அழுத்தம் அதிகரத்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு இ-மெயில் கிடைத்தது. அதில், கடினமாக உழைக்கத் தயாராக இருங்கள் அல்லது 3 மாத சம்பளத்துடன் ராஜினாமா செய்யுங்கள் என எச்சரிக்கை விடுத்தார். இது பற்றி விரைவில் நீங்கள் முடிவெடுங்கள் என கூறினார். இதையடுத்து ஒட்டு மொத்தமாக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து இன்று தற்காலிகமாக டுவிட்டரை மூடப்படுவதாக எலன்மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்நிலை நீடிக்கும்பட்சத்தில் டுவிட்டர் அதிக இழப்புகளை சந்திக்க நேரிடும். எனினும் இ-மெயில் அறிவிப்பில் நவம்பர் 21 ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தில் நிகழும் ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கொள்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ’’டுவிட்டரின் அற்புதமான எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற டுவிட்டர் நிர்வாகம் ஆவலுடன் காத்துள்ளது’’ எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் திடீரென எடுக்கப்பட்ட இந்த முடிவு எஞ்சியுள்ள ஊழியர்களையும் பீதியடையச் செய்துள்ளது. இதன் காரணமாகவே பிற ஊழியர்கள் ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Post

’’ஷ்ரத்தா கொலைக்கு லிவிங் டுகெதர் காரணம்’’ மத்திய அமைச்சர் பேச்சால் வெடித்தது சர்ச்சை…!!

Fri Nov 18 , 2022
டெல்லியில் காதலியை கொலை செய்து 35 கூறுகளாக்கி வீசிய சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் கொலைக்கு லிவிங் டுகெதர் வாழ்க்கை காரணம் என்று அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷ்ரத்தா என்ற பெண் ஒருவர் காணாமல்போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் பின்னர் அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. காதலனே தன் காதலியை கொலை செய்து 35 கூறுகளாக்கி வனப்பகுதிக்குள் வீசியது […]

You May Like