fbpx

Breaking | பேரதிர்ச்சி.. சென்னையில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு..!! மீண்டும் ஊரடங்கா..?

கர்நாடக மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், பெங்களூரில் HMPV வைரஸின் முதல் வழக்கு பதிவாகி, இந்தியாவிற்குள் வைரஸ் நுழைந்துள்ளது மக்களை பீதி அடைய செய்துள்ளது. கொரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளுடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி-HMPV) எனும் புதிய வைரஸ் சீனா வடகிழக்கு மாகாணங்களில் பரவ தொடங்கியது. HMPV வைரஸ் என்பது கொரோனா போலவே, மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். இந்த வைரஸ் குறிப்பாக, 14 வயதுக்கு குறைவான வயது கொண்டவர்களை அதிகமாக தாக்குகிறது.

இந்நிலையில் சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கார்நாடக மாநிலமான பெங்களுருவில் 8 மாதக் குழந்தைக்கும், 3 மாத குழந்தைக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதனை ICMR உறுதிப்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 3வது HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அகமதாபாத்தில் இரண்டு மாத குழந்தைக்கு மூச்சுக்குழாய் நிமோனியா பாதிப்பு காரணமாக HMPV பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை சென்னை சேத்துப்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மற்றொரு குழந்தை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது தமிழகத்தில் சென்னை வரை பரவியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read more ; அதிகரிக்கும் HMPV வைரஸ் பாதிப்பு…! கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் ஒரு குழந்தைக்கு பாதிப்பு உறுதி..!

English Summary

Two children from Chennai have been confirmed to be infected with the HMPV virus

Next Post

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பிரமாண்ட அணை.. இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது..!! - சீனா உறுதி

Mon Jan 6 , 2025
China claims its world's biggest dam over Brahmaputra won't affect water flow to India

You May Like