fbpx

யானை தந்தங்களை கடத்திய இருவரை கைது செய்த ஒடிசா போலீஸ் !

ஒடிசா மாநிலத்தில் யானை தந்தம் கடத்தியது தொடர்பாக இரண்டு நபர்களை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் மைத்திரி விகார் பகுதியைச் சார்ந்த காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்தபோது சைனிக் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக இரண்டு நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் யானை தந்தங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை. காவல்துறையின் விசாரணையில் அந்த இரண்டு நபர்களும் கந்தமால் மாவட்டத்தைச் சார்ந்த கிரிஷ் குமார் நாயக் மற்றும் தீபக் சாஹூ என்று தெரிய வந்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ அளவிலான யானை தந்தங்கள் மூன்று செல்போன் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றையும் காவல்துறையும் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக அந்த இரண்டு நபர்களும் வனத்துறை அதிகாரிகளிடம் மேற்படி விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. வனவிலங்குகளை வேட்டையாடுவது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும். விலங்குகளை வேட்டையாடி அவற்றிலிருந்து பெறப்படும் பொருட்களை விற்பனை செய்வதும் சட்டத்திற்கு விரோதமானது. இது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட இந்த இருவரையும் தண்டிக்கும் பொருட்டு வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைத்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்து இருக்கிறது.

Rupa

Next Post

"வெளியே சொன்னா கொன்னுடுவேன்.."! நான்காம் வகுப்பு மாணவிக்கு ஒரு வருடத்திற்கு மேல் நடந்த கொடுமை!

Mon Feb 20 , 2023
திருவண்ணாமலை அருகே 9 வயது சிறுமியை தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த நபரை காவல்துறையினர் போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த நீலந்தாங்கலை சார்ந்தவர் உத்திரகுமார் இவருக்கு வயது 35. பம்மை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கின்றன. இந்நிலையில் அப்பகுதியைச் சார்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி ஒருவரை […]

You May Like