fbpx

மது அருந்திய இருவர் உயிரிழந்த விவகாரம், சயனைடு கலக்க பட்டதா?

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடியைச் சேர்ந்தவர் பழனி குருநாதன் (55). இவர் மங்கைநல்லூர் கடைவீதியில் தச்சுப் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த புராசாமி (65) என்பவர் அவரது தச்சுப் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் நண்பர்கள்போல் பழகிவந்த நிலையில், இரவு நேரங்களில் மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரண்டு பேரும் வாந்தி மயக்கத்துடன் பட்டறையில் கிடந்துள்ளனர். இதை அறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்தினரும், இருவருக்கும் எந்த விதமான கடன் பிரச்னைகளும் இல்லை என்றும் உடலில் எந்த நோய்களும் இல்லை என்றும், மது அருந்தியதன் விளைவாக இருவரும் உயிரிழந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், இவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான முழுவிவரங்களை, கீழ்காணும் வீடியோவில் காண்க.

Maha

Next Post

சட்டமன்ற அலுவலகத்திற்கு புகுந்த மர்ம நபர் சாலையோரம் சடலமாக மீட்பு

Tue Jun 13 , 2023
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றுள்ளார். இந்நிலையில், கதவை சாத்திய மர்ம நபரை சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த விஜயன் என்பவர் பிடித்து வெளியேற்றினார். இதையடுத்து இதுபற்றி பந்தய சாலை காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர் […]
’என்ன பிரச்சனையோ தெரியலையே’..!! பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைகிறார் வானதி சீனிவாசன்..??

You May Like