fbpx

இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு..!! சாதனைப் படைத்த இந்தியா..!! அசத்திய இஸ்ரோ..!! குவியும் பாராட்டு..!!

இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 200 கிலோ எடை கொண்ட இரு செயற்கைக்கோள்கள் பரிசோதனை முயற்சியாக இணைக்கப்பட்டது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான், சந்திரயான் 4 திட்டங்களுக்கு டாக்கிங் என்பது முக்கியமானது. டாக்கிங் செயல்முறையை நிகழ்த்தி அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து இந்தியா சாதனைப் படைத்துள்ளது.

கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் மூலம் இரு செயற்கைக் கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. 4 முறை டாக்கிங் பரிசோதனை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று காலை இணைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள்களின் இடைவெளி 15 மீட்டரில் இருந்து 3 மீட்டருக்கு குறைக்கப்பட்ட பின் இரண்டும் இணைக்கப்பட்டன. செயற்கைக்கோள்கள் ஒருங்கிணைப்பு பணி வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என இஸ்ரோ பதிவிட்டுள்ளது.

Read More : அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!! ரூ.59,000-ஐ கடந்த தங்கம் விலை..!! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்வு..!!

English Summary

ISRO announced that the docking process of the two satellites was successfully completed.

Chella

Next Post

விண்வெளியில் செக்ஸ் சாத்தியமா? விண்ணில் பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும்..?

Thu Jan 16 , 2025
Can you get pregnant in space? Is it safe for the mother and baby if the delivery takes place there?

You May Like