மேகாலயா – அசாம் எல்லையில் போலீஸாருடன் நடந்த மோதலில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இணைய சேவை ரத்து செய்யப்பட்டதுடன், வேறு மாநில வாகனங்கள் மேகாலயாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேகாலயா மாநிலத்தில் அசாம் எல்லையையொட்டி உள்ள மேற்கு ஜெய்ன்டியா மாவட்டத்தில் லாரியில் மரம் கடத்துவதாகக் கூறி, அசாம் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு குவிந்த மக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது, நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேரும், அசாமைச் சேர்ந்த வனப் பாதுகாவலரும் உயிரிழந்தனர். இது இரு மாநில மோதலாக மாறியுள்ளது. வன்முறையைத் தடுக்க மேகாலயாவில் உள்ள 7 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மேகாலயாவுக்கு வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாம் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல, மத்திய படை விசாரணை நடத்த வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை மேகாலயா அமைச்சரவைக் குழு நாளை சந்திக்க உள்ளது.